Advertisement

நடிகை ஷில்பா ரெட்டியை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா!

By: Monisha Sun, 28 June 2020 3:02:52 PM

நடிகை ஷில்பா ரெட்டியை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா!

நடிகை ஷில்பா ரெட்டிக்கும், அவர் கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாகவும், இரண்டு வாரங்களாக வீட்டுத் தனிமையில் சிகிச்சைக்குப் பிறகு, இருவரும் முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், தொற்று காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சியுடன் எப்படி ஒருவர் இதைத் தாண்டி வரலாம் என்ற ஆலோசனையையும் அதில் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனா, ஷில்பாவைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

shilpa reddy,actor nagarjuna,actress samantha,corona virus ,ஷில்பா ரெட்டி,நடிகர் நாகார்ஜுனா,நடிகை சமந்தா,கொரோனா வைரஸ்

உலகில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வரும் வேளையில், ஆரோக்கியமான மனதுடனும், உடலுடனும் இருப்பதே சரியான தீர்வாகத் தெரிகிறது. எங்கள் அன்பார்ந்த நண்பர் ஷில்பா ரெட்டியும் அவரது கணவரும் இந்த தொற்றை அனுபவித்து, அதிலிருந்து அற்புதமாக மீண்டு வந்துள்ளனர். அவரது அனுபவம் ஊக்கமூட்டுகிறது! என்று ஷில்பாவின் காணொலியைப் பகிர்ந்து நாகார்ஜுனா பாராட்டியுள்ளார்.

முன்னதாக, துணிச்சலுடன் இந்த விஷயத்தைப் பற்றி வெளியில் சொல்லி, தங்களைப் பெருமை கொள்ளச் செய்துவிட்டார் என நடிகை சமந்தாவும் தோழி ஷில்பாவைப் பாராட்டி இருந்தார்.

Tags :