Advertisement

விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம்

By: Nagaraj Thu, 19 Oct 2023 07:09:40 AM

விஜய் டிவி நடத்தும் நவராத்திரி கொண்டாட்டம்

சென்னை: 7 நகரங்களில் விஜய் டிவி நவராத்திரி கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்துகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய 7 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து திருவிளக்குப் பூஜை, பிரபலங்கள் பங்கேற்கும் சொற்பொழிவு, சூப்பர் சிங்கர்களின் பக்தி நிகழ்ச்சி நடக்கிறது.

சமையலர் தாமு தயாரித்த சிறப்பு நவராத்திரி பிரசாதமும் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம், சென்னை, ஈரோட்டில் நிகழ்ச்சி நடந்தது. திருச்சியில் நடந்தது.

7 cities,hashtag,navratri celebration ,தஞ்சாவூர், திருநெல்வேலி, மதுரை

நாளை 20-ம் தேதி திருநெல்வேலியிலும், 21-ம் தேதி தஞ்சாவூரிலும், 22-ம் தேதி மதுரையிலும் நடைபெறவுள்ளது. நவராத்திரி ஸ்பெஷலாக கொலு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி (@vijaytelevision) இன்ஸ்டாகிராமில் #VijayGoluContest என்ற ஹேஷ்டேக்குடன் வீட்டில் இருக்கும் அழகான கோலுவின் புகைப்படங்களை வெளியிட்டால் முதல் 3 வெற்றியாளர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Tags :