Advertisement

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்

By: vaithegi Wed, 25 Oct 2023 12:40:11 PM

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டார். இதற்கு அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, ஹெச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் அறிமுகத் தோற்றம் கமல்ஹாசன் பிறந்த நாளான வருகிற நவ.7ம் தேதி வெளியாகிறது. இதற்கானப் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தான் நடந்தது.

நயன்,கமல் ,நயன், கமல்

மணிரத்னம் இயக்கும் படத்தின் புரமோவுக்கான படப்பிடிப்பு, சென்னை பின்னி மில்லில் சமீபத்தில் நடந்து முடிந்து உள்ளது.இதையடுத்து கமலின் புதிய தோற்றம் கொண்ட இந்த வீடியோவும் நவ.7ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Tags :