Advertisement

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நயன்தாரா!

By: Monisha Wed, 07 Oct 2020 10:20:09 AM

அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் அறிமுக இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களுடன் கூட நடிக்க தயங்க மாட்டார். அந்த வகையில் அவர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான முதல் படமான மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா தற்போது மீண்டும் ஒரு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பழம்பெரும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியவர் ராம்போ ராஜ்குமார். இவரிடம் உதவி ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்த கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா, பீட்டர் ஹெயின், உள்ளிட்டவர்கள் தற்போது முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara,stunt master,navkanth,director,new movie ,நயன்தாரா,ஸ்டண்ட் மாஸ்டர்,நவகாந்த்,இயக்குனர்,புது படம்

இந்த நிலையில் ராம்போ ராஜ்குமார் மகன் நவகாந்த் ஒரு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவர் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்துவிட்டதாகவும் இதனை அடுத்து அவருடைய இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ரஜினியின் ’அண்ணாத்த’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :