Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திருமணநாளையொட்டி நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி ……..ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்

திருமணநாளையொட்டி நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி ……..ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்

By: vaithegi Thu, 09 June 2022 3:47:25 PM

திருமணநாளையொட்டி நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி ……..ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு அன்னதானம்

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு இன்று (9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறுகிறது.

திருமணநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது. திருமணத்திற்கான மொத்த ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.

nayantara,vignesh sivan,orphans,lunch ,நயன்தாரா, விக்னேஷ் சிவன் ,ஆதரவற்றோர் குழந்தைகள், மதிய உணவு

இத்திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கலா மாஸ்டர், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம். குறிப்பாக நடிகை நயன்தாராவின் குடும்ப உறவினர்கள் தான் அதிகளவில் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

Tags :