Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நயன்தாரா

அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நயன்தாரா

By: Nagaraj Sat, 19 Dec 2020 11:39:34 PM

அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன நயன்தாரா

பாட்டு திரைப்படத்தில் நடிக்கிறார் நயன்தாரா... ப்ரேமம் படம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் 5 வருடங்கள் கழித்து இயக்கவுள்ள "பாட்டு" திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டில் வெளி வந்த மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படம் பிரேமம். அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்தப் படம் கேரளா மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

actor bahadur,nayanthara,alphonse puthiran,direction ,நடிகர் பஹத், நயன்தாரா, அல்போன்ஸ் புத்திரன், இயக்கம்

காதல் - பிரேக்கப் என ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி இருப்பார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இப்படத்திற்கு பிறகு தற்போது வரை அல்போன்ஸ் புத்திரன் எந்த ஒரு படமும் இயக்கவில்லை.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவும் அடுத்த படமான 'பாட்டு' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கப்போவதாகவும் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :