Advertisement

மணப்பெண் வேடத்தில் நயன்தாரா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

By: Monisha Sun, 15 Nov 2020 5:59:53 PM

மணப்பெண் வேடத்தில் நயன்தாரா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் மாஸ் நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதேபோல் கடந்த சில வருடங்களாக விளம்பர படத்தில் நடிக்காமல் இருந்த நயன்தாரா தற்போது முக்கிய நிறுவனங்களின் விளம்பர படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் மணப்பெண் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார் இந்த விளம்பரப் படத்தில் அவர் சிவப்பு நிற பட்டுச்சேலை, இரண்டு மூக்குத்திக்கள் உள்பட கழுத்து நிறைய நகைகள் நெற்றிச்சுட்டி என ஜெகஜோதியாய் உள்ளார்.

nayantara,bridal dress,photos,viral,advertising ,நயன்தாரா,மணப்பெண் வேடம்,புகைப்படங்கள்,வைரல்,விளம்பரம்

நயன்தாராவின் புன்சிரிப்புடன் கூடிய அழகை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அசந்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண் வேடத்தில் நயன்தாரா தயாராக இருக்கும் நிலையில் மணமகனாக விக்னேஷ் சிவன் எப்போது தயாராவார்? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

Tags :
|
|