Advertisement

இன்ஸ்டாவில் விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகையாக நயன்தாரா சாதனை

By: vaithegi Sat, 02 Sept 2023 11:06:07 AM

இன்ஸ்டாவில் விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகையாக நயன்தாரா சாதனை

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவரும் நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்று உள்ளார். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்து உள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இப்படம் செப்.7ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் ஜவான் ரிலீஸுக்கு முன்பாக நடிகை நயன்தாரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து உள்ளார். அதில் தன் குழந்தைகளான உயிர், உலகம் ஆகியோரின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

nayanthara,insta ,நயன்தாரா ,இன்ஸ்டா

இதனை அடுத்து இது பெரிதும் வைரலானது. இந்நிலையில் அவர் இன்ஸ்டாவில் சாதனைப் படைத்துள்ளார். கணக்குத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பத்துலட்சம் பாலோயர்கள் அவரை பின் தொடரத் தொடங்கி உள்ளனர்.

மேலும் இவ்வளவு விரைவாக அதிக பாலோயர்களை கொண்ட நடிகையாக நயன்தாரா சாதித்து உள்ளார். இதற்கு முன், நடிகை கேத்ரினா கைஃபுக்கு 10 லட்சம் பாலோயர்கள் 24 மணி நேரத்தில் கிடைத்திருந்தனர்

Tags :