Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கி குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா

இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கி குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா

By: Nagaraj Thu, 31 Aug 2023 6:47:19 PM

இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கி குழந்தைகளுடன் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா

சென்னை: தனது இரு குழந்தைகளுடன் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா. இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி தன் குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. வாடகைத் தாய் மூலம் அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து தனது குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா, சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார்.

account on insta,awesome entry,nayanthara ,இன்ஸ்டாவில், இரட்டை குழந்தை, நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் மட்டுமே அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார்.

முதல் முறையாக, அவர் தனது குழந்தைகளான ருத்ரோ நீல் மற்றும் உலக் தெய்வக் ஆகியோருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :