- வீடு›
- பொழுதுபோக்கு›
- மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாரா நயன்தாரா?
மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாரா நயன்தாரா?
By: Nagaraj Sat, 12 Nov 2022 4:33:38 PM
சென்னை: அறிமுக இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, வாடகைத் தாய் மூலம் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார்.
‘கனெக்ட்’, ‘இறைவன்’ படங்களை முடித்துள்ள அவர், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில்
இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில்
அறிமுக இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன் ஜோடியாக நடிக்க அவர்
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சித்தார்த் முக்கிய
கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.