Advertisement

தங்கைக்கு ராக்கி கட்டிய நயன்தாரா... ரக்சாபந்தன் ஸ்பெஷல்

By: Nagaraj Thu, 11 Aug 2022 9:13:30 PM

தங்கைக்கு ராக்கி கட்டிய நயன்தாரா... ரக்சாபந்தன் ஸ்பெஷல்

சென்னை: நயன்தாரா தனது தங்கை கையால் ராக்கி கட்டிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்று ரக்சாபந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சகோதரர் மற்றும் சகோதரியின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், சகோதரன், சகோதரியின் கையில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். சகோதரர் தன்னை பாதுகாப்பார் என்ற உறுதிமொழியையும் சகோதரி பெற்று கொள்வார்.

nayanthara,sister,rakshabandhan,rocky,fans,congratulations ,நயன்தாரா, சகோதரி, ரக்சாபந்தன், ராக்கி, ரசிகர்கள், வாழ்த்து

இந்த நல்ல நாளில் நயன்தாராவின் கையில் அவரது தங்கை ராக்கி கயிறு கட்டி ரக்சா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,நயன்தாராவும் தனது தங்கைக்கு ராக்கி கட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை டாக்டர் ரினிதா ராஜன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, எப்போதும் வலிமையான மனிதர்களில் ஒருவராக இவருடன் நட்பையும் சகோதரத்துவத்தையும், பரஸ்பரம் மரியாதையும் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|