Advertisement

கணவர் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா!

By: Monisha Fri, 06 Nov 2020 4:54:01 PM

கணவர் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா!

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று கட்டியணைத்து முத்தமிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன், விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் பகத் பாசில். அதேபோல் தமிழில் ராஜா ராணி, நையாண்டி, நேரம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நஸ்ரியா. பகத்பாசில், நஸ்ரியா இருவரும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

kiss,nazriya,fahat,photo,instagram ,முத்தம்,நஸ்ரியா,பகத் பாசில்,புகைப்படம்,இன்ஸ்டாகிராம்

திருமணத்திற்கு பின்னர் நஸ்ரியா நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் 'டிரான்ஸ்' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த பிப்ரவரியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நஸ்ரியா, சமீபத்தில் தனது கணவர் முத்தம் கொடுக்கும் புகைப்படம் உள்பட ஒருசில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|