Advertisement

தசரா படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்

By: Nagaraj Sat, 14 Jan 2023 10:58:13 PM

தசரா படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனம்

ஐதராபாத்: தசரா படத்தின் ஓடிடி உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தரி படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

dasara,hyderabad,nani , ஐதராபாத், தசரா, நானி, ஓடிடி தளம், நெட்பிளிக்ஸ்

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தசரா படத்தின் ஓடிடி உரிமம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தசரா’ படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது. OTT மூலம் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது.

Tags :
|