Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸை "வைச்சு செய்யும்" நெட்டிசன்கள்

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸை "வைச்சு செய்யும்" நெட்டிசன்கள்

By: Nagaraj Mon, 12 Oct 2020 10:04:38 AM

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸை "வைச்சு செய்யும்" நெட்டிசன்கள்

அவங்க அப்பா, அம்மா குடிகாரர்கள் என்று கூறிய பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் பீர் பாட்டிலை ஓப்பன் செய்து குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் செமத்தியாக கலாய்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சொந்தக் கதையை கூறும் போது, 'தான் அப்பா அம்மா பாசத்திற்காக ஏங்கியதாகவும், ஆனால் அவர்கள் இருவருமே தன்னை கவனிக்கவில்லை. இருவருமே குடிபோதையில் இருப்பார்கள் என்று கூறியிருந்தார். ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்று அவர் ஆவேசமாக கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

netizens,big boss balaji,beer bath,photo ,நெட்டிசன்கள், பிக்பாஸ் பாலாஜி, பீர் குளியல், புகைப்படம்

கமல்ஹாசனும் இதுகுறித்து உருக்கமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலாஜியின் அப்பா, அம்மா குடிகாரர்களா என்பது தெரியாது. ஆனால் பாலாஜி முருகதாஸ் மதுவிலேயே குளிப்பார் என்று கூறும் நெட்டிசன்கள் அவர் பீரை தலையில் ஊற்றும் புகைப்படம் ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.

இதனை அடுத்து பாலாஜியின் அட்மின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஒருசில சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்து வருவதாகவும், பாலாஜி முருகதாஸ் உள்ளே பேசியதற்கு முற்றிலும் முரண்பாடாக இருப்பதால் அவசர அவசரமாக புகைப்படங்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Tags :