Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்... விரைவில் வெளியிடுவாங்களாம்

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்... விரைவில் வெளியிடுவாங்களாம்

By: Nagaraj Wed, 26 July 2023 11:38:09 PM

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல்... விரைவில் வெளியிடுவாங்களாம்

சென்னை: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சரித்திர பாணியில் உருவாகி வரும் இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

acting,captain miller,dhanush,information,movie,teaser ,கேப்டன் மில்லர், டீசர், தகவல், தனுஷ், நடிப்பு, படம்

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் கேப்டன் மில்லரின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும், விரைவில் வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags :
|
|