Advertisement

புதிய பட ப்ரோமோஷனா... உண்மையை சொல்லுங்கள் நித்யா மேனன்

By: Nagaraj Fri, 28 Oct 2022 9:25:39 PM

புதிய பட ப்ரோமோஷனா... உண்மையை சொல்லுங்கள் நித்யா மேனன்

சென்னை : புதிய பட ப்ரோமோஷனாக இருக்கும் என்று சொல்றாங்க ரசிகர்கள். எதை பார்த்து தெரியுங்களா.

நடிகை நித்யா மேனன் காஞ்சனா, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்த திருச்சிற்றம்பலம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இப்படத்தில் தனுஷை விட ஷோபனாவாக நடித்த நித்யா மேனன் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார்.

34 வயதை கடந்த நித்யா மேனன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் நித்யா மேனன் இன்ஸ்டாகிராமில் கர்ப்ப பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தற்போது, ​​தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாசிட்டிவ் கர்ப்ப பரிசோதனை கருவி மற்றும் குழந்தையின் ராப்பர் நிப்பிள் உடன் தி வொண்டர் பிகின்ஸ் என்ற தலைப்பில் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

நீங்கள் திருமணமானவரா? நித்யா மேனனுக்கு வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் நித்யா மேனன் தாயாக மாற வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இது நித்யா மேனனின் புதிய பட ப்ரோமோஷனாக இருக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :