Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை...தயாரிப்பாளர்கள் திடீர் போர்க்கொடி

திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை...தயாரிப்பாளர்கள் திடீர் போர்க்கொடி

By: Monisha Tue, 08 Sept 2020 4:33:07 PM

திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை...தயாரிப்பாளர்கள் திடீர் போர்க்கொடி

திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு ஏற்பட்டால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

theaters,new movies,release,producers,cube fees ,திரையரங்குகள்,புதிய படங்கள்,ரிலீஸ்,தயாரிப்பாளர்கள்,கியூப் கட்டணம்

இந்த நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கியூப் கட்டணத்தை செலுத்த முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

எனவே திரையரங்குகள் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தாலும், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :