Advertisement

வாத்தி படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியீடு

By: Nagaraj Mon, 24 Oct 2022 6:37:42 PM

வாத்தி படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியீடு

சென்னை: தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி பண்டிகையான இன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.


தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கிய படம் வாத்தி. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் தீபாவளி பண்டிகையான இன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த போஸ்டரில், தனுஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக வில்லனின் வயிற்றில் மண்டியிட்டு குத்துவது போல் காட்சியளிக்கிறது.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வாத்தி படத்தில் தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்த கருணாஸ், சாய்குமார் மற்றும் தணிகெள்ள பரணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

film directed,telugu director,vathi,venkat atluri ,தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குனர், வாத்தி, வெங்கட் அட்லூரி

வாத்தி படத்திற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. விஜய், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தனுஷும் வாத்தி படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

தனுஷின் வாத்தி படத்தைப் போலவே தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் கருப்பு நிற உடையில் சுத்தியல் அணிந்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் வாத்தி படத்தை வாரிஸுக்கு முன் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், புதிதாக வெளியான வாத்தி படத்தின் இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|