Advertisement

வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு

By: Nagaraj Mon, 12 Sept 2022 7:19:16 PM

வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை: நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகிவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகரம் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான நாய் சேகர் பட கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.

new poster,birthday,vadivelu,music,film ,புதிய போஸ்டர், பிறந்த நாள், வடிவேலு, இசையமைக்கிறார், படம்

நாய் சேகர் என்ற பெயரில் முன்னரே சதிஷ் படம் அறிவிக்கப்பட்டதால் இந்தப் படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டது. தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.


இந்தப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நிலையில் வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Tags :
|