Advertisement

'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் புதிய அப்டேட்

By: vaithegi Mon, 28 Nov 2022 09:23:01 AM

'நாய் சேகர் ரிட்டன்ஸ்'  படத்தின் புதிய அப்டேட்

சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து அந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இதனை அடுத்து அந்தப் படத்தில் வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அதேபோன்று சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

nai shekhar,updated ,நாய் சேகர் ,அப்டேட்

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

எனவே அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டு வருகின்றனர்.

Tags :