Advertisement

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் புதிய அப்டேட்

By: vaithegi Fri, 14 Apr 2023 11:50:02 AM

'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது.

இதனை அடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

update,ponnis selvan ,அப்டேட்,பொன்னியின் செல்வன்

தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள முதல் திரைப்படமாக 'பொன்னியின் செல்வன் -2' வெளியாகவுள்ளது. இதையடுத்து இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' 1 பாகம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் 'பிஎஸ் ஆந்தம்' வருகிற 15-ஆம் தேதி அண்ணா பல்கலைகழகத்தில் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
|