Advertisement

வந்திடுச்சு வாத்தி படத்தின் புது அப்டேட்டு... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Tue, 01 Nov 2022 6:29:12 PM

வந்திடுச்சு வாத்தி படத்தின் புது அப்டேட்டு... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’.

பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது

new,of vathi,update,gv prakash,new update,fans,viral ,ஜி.வி.பிரகாஷ், புதிய அப்டேட் , ரசிகர்கள், வைரல்

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘வாத்தி’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|
|