- வீடு›
- பொழுதுபோக்கு›
- மாதவன் நடித்து வரும் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!
மாதவன் நடித்து வரும் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!
By: Monisha Fri, 05 June 2020 5:54:15 PM
மாதவன் நடித்து வரும் திரைப்படமான ‘மாறா’ திரைப்படம் குறித்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாதவன் மற்றும் ஸ்ரதா ஸ்ரீநாத் நடிப்பில் எங்கள் தயாரிப்பில் உருவாகி வரும் “மாறா” திரைப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் கொரொனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். மிக விரைவில் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசைகோர்ப்பு பணிகள் துவங்க உள்ளன.
தற்போதைய கொரோனா நோய் பரவல் தீவிரமான இந்த சூழ்நிலையில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகள் அனைத்தும் கண்டிப்பாக மிகச் சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறும், படக்குழுவினரின் பாதுகாப்பே எங்களது முதன்மை குறிக்கோள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். பிரபலமான பல விளம்பர படங்கள் மற்றும் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற “கல்கி” திரைப்படத்தினை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார்.
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் மிகப்பெரும் தமிழ் சினிமா ஆளுமைகள் இப்படத்தின் நடிப்பு மற்றும் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர், அவர்களை பற்றிய விவரங்கள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.