Advertisement

விக்ரம் 60 படத்தின் வில்லன் குறித்த புது அப்டேட்!

By: Monisha Sat, 27 June 2020 11:20:08 AM

விக்ரம் 60 படத்தின் வில்லன் குறித்த புது அப்டேட்!

சியான் விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் நடிக்க உள்ள 60 வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும் இந்த படத்தின் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

vikram,dhruv vikram,karthik subburaj,cinema,shooting ,விக்ரம்,துருவ் விக்ரம்,கார்த்திக் சுப்புராஜ்,சினிமா,படப்பிடிப்பு

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் வில்லன் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் விக்ரம்தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அப்படியானால் விக்ரம் இந்த படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்கின்றாரா? அல்லது துருவ் விக்ரம் ஹீரோவாகவும் விக்ரம் வில்லனாக நடிக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் 60 படத்தின் திரைக்கதை முழுவதையும் கார்த்திக் சுப்புராஜ் முடித்து விட்டதாகவும் ஊரடங்கு முடிந்து படப்பிடிப்பு தொடங்கிய உடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags :
|
|