Advertisement

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் படம் குறித்த புது அப்டேட்!

By: Monisha Fri, 21 Aug 2020 11:33:21 AM

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் படம் குறித்த புது அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தளபதி விஜய்யுடன் விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக விரைவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படம் 'லாபம்'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை ஆறு மணி 5 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

vijay sethupathi,laabam film,trailer,sruthihaasan,farmers ,விஜய்சேதுபதி,லாபம் படம்,டிரைலர்,ஸ்ருதிஹாசன்,விவசாயிகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்த படத்தை இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார்.

இந்தப் படம் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் கொண்ட கதையம்சம் கொண்டது என்றும் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையில் உள்ள இடைத் தரகர்கள் எவ்வாறு விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சுகின்றனர் என்பதும், கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags :