Advertisement

நடிகர் தனுஷ் புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sat, 14 Jan 2023 5:44:54 PM

நடிகர் தனுஷ் புதிய படம் இயக்க உள்ளதாக தகவல்... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘பா பாண்டி’ படத்திற்குப் பிறகு, தனுஷ் மீண்டும் இயக்குநராக வரவுள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது ‘நானே வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியானது. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

dhanush,rayan,tamil cinema, ,தனுஷ், தமிழ் சினிமா, ராயன்

இப்படத்தைத் தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருணுடன் தனுஷ் முதன்முறையாக இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பா பாண்டி’ படத்திற்குப் பிறகு, தனுஷ் மீண்டும் இயக்குநராக வரவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், படம் வடசென்னையில் உருவாகவுள்ளதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மீண்டும் டைரக்சன் செய்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|