Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் சிவகார்த்திக்கேயன் அயலான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்

நடிகர் சிவகார்த்திக்கேயன் அயலான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்

By: vaithegi Thu, 23 Nov 2023 3:22:35 PM

நடிகர் சிவகார்த்திக்கேயன் அயலான் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'அயலான்'. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இதையடுத்து கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. இதற்கு இடையே இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

actor sivakarthikeyan,ayalan,theaters ,நடிகர் சிவகார்த்திக்கேயன் ,அயலான் ,திரையரங்குகள்


இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் திரைப்படம் உலக அளவில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் சிவகார்திகேயனின் அயலான் திரைப்படம் உலக அளவில் அதிக திரையரங்களில் வெளியாக சாதனை படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|