Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது!

By: Monisha Tue, 16 June 2020 3:44:34 PM

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது!

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் அடுத்த படம் 'நோ டைம் டு டை'. இந்த படத்தை அமெரிக்கத் திரையரங்குகளில் ஐந்து நாட்களுக்கு முன்பே வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் வருமாறு:-

அமெரிக்காவில் நவம்பர் 25-ம் தேதி வெளியாகவிருந்த நோ டைம் டு டை படம் தற்போது நவம்பர் 20-ம் தேதி அமெரிக்கா உட்பட உலகின் மற்ற நாடுகளிலும் வெளியாகிறது. ஜேம்ஸ் பாண்ட் திரை வரிசையின் அதிகாரபூர்வ பக்கத்தில் தயாரிப்பாளர்கள் இந்தத் தகவலை அறிவித்துள்ளனர். பிரிட்டனில் நவம்பர் 12-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

james bond,no time to die,actor daniel craig,november ,ஜேம்ஸ் பாண்ட்,நோ டைம் டு டை,நடிகர் டேனியல் க்ரைக்,நவம்பர்

இதற்கு காரணம் வார்னர் பிரதர்ஸ் குழுவினர், தங்களின் 'காட்ஸில்லா வெர்சஸ் காங்' திரைப்பட வெளியீட்டை மே 21, 2021-க்கு தள்ளிவைத்தனர். இதைத் தொடர்ந்து 'நோ டைம் டு டை' படத்தை ஐந்து நாட்கள் முன்னதாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தை கேரி ஜோஜி ஃபூகுநாகா இயக்கியுள்ளார்.

'நோ டைம் டு டை' படத்தில் நடிகர் டேனியல் க்ரைக் நடித்துள்ளார். இவரின் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் இது. ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags :