Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது

By: vaithegi Mon, 23 Oct 2023 10:30:05 AM

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது

இந்தாண்டு (2023) தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4 பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

1.தங்கலான்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’ . இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தான் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

2.அயலான்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் “அயலான்”. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிந்துவிட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இறுதியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என படத்தின் டீசர் வெளியீட்டு அறிவித்துவிட்டது.

Tags :
|