Advertisement

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடுத்தாண்டு திருமணம்?

By: Nagaraj Tue, 27 Oct 2020 9:17:05 PM

பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு அடுத்தாண்டு திருமணம்?

லாஸ்லியாவுக்கு அடுத்தாண்டு திருமணம்... பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான லாஸ்லியாவிற்கு 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3யில் இலங்கை தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியனேசன். ஆரம்பத்தில் தன் குறும்பு நடவடிக்கைகளால் சிறப்பாக ஆட்டத்தை விளையாடினாலும் கவினுடன் ஏற்ப்பட்ட காதலால் சில சிக்கல்களை சந்தித்தார்.

இருப்பினும் இவர்களது காதல் திருமணத்தில் தான் முடியும் என எதிர்பார்த்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்த பிறகு இவர்களின் உறவு நீடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

laslia,marriage,canada groom,gavin,position ,லாஸ்லியா, திருமணம், கனடா மாப்பிள்ளை, கவின், நிலைப்பாடு

அதன் பிறகு திரைப்படங்கள், விளம்பரப்படங்களில் லாஸ்லியா பிஸியாக உள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் லாஸ்லியாவின் தந்தை மரியனேசன் கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை திருமணத்திற்கு பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருமணம் 2021ல் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் லாஸ்லியாவின் நிலைப்பாடு என்ன என்பதை இனிமேல்தான் தெரிய வரும்.

Tags :
|
|