Advertisement

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது நிவாஷினி

By: Nagaraj Sun, 20 Nov 2022 2:16:38 PM

இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவது நிவாஷினி

சென்னை: இந்த வாரம் நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி தொடங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

eviction,niwashini,bigg boss house,main contestant ,
வெளியேற்றம், நிவாஷினி, பிக்பாஸ் வீடு, முக்கிய போட்டியாளர்

அதன்பின் அசல், ஷெரினா, மகேஷ்வரி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 16 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் 41வது நாளை நெருங்கி இருக்கிறது.

சென்ற வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடும் சண்டையிட்டு கொண்டனர். இதன் காரணமாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற போகிறார் என எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் முக்கிய போட்டியாளரான நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :