Advertisement

இடைக்கால தடையெல்லாம் விதிக்க முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு

By: Nagaraj Wed, 28 June 2023 9:29:42 PM

இடைக்கால தடையெல்லாம் விதிக்க முடியாது... உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், ஓஎஸ்டி பிலிம்ஸ் உரிமையாளர் ராமசரவணன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், படத்திற்கு தடை இல்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ‘ஏஞ்சல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த உதயநிதி ஸ்டாலின், அந்த படத்தில் முழு நடிப்பை வெளிப்படுத்தும் முன்பே ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அமைச்சரான பிறகு இதுதான் தனக்கு கடைசி படம் என்றும் உதயநிதி கூறினார்.

chennai,denial,film,high court,interim stay,mamannan , இடைக்கால தடை, உயர்நீதிமன்றம், சென்னை, திரைப்படம், மறுப்பு, மாமன்னன்

இதையடுத்து, ஏஞ்சல் படம் 80% முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள 20% பணிகளை முடிக்க வேண்டும் என்றும் ஓஎஸ்டி படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன், படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூன் 28ம் தேதிக்குள் பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கும், ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Tags :
|
|