Advertisement

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை - நடிகை சிம்ரன்

By: Monisha Tue, 02 June 2020 3:07:30 PM

சந்திரமுகி 2 படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை - நடிகை சிம்ரன்

சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’சந்திரமுகி’ திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த செய்தியை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.

’சந்திரமுகி 2’ படத்தில் மனநல மருத்துவர் சரவணன் கேரக்டரில் ரஜினிகாந்த்தும், வேட்டையன் கேரக்டரில் ராகவா லாரன்ஸும் நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

super hit movie,chandramukhi 2,actress simran ,சூப்பர் ஹிட் படம்,சந்திரமுகி 2,நடிகை சிம்ரன்

இந்த செய்தி குறித்து நடிகை சிம்ரன் கூறியதாவது:- ’சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. இது முழுக்க முழுக்க வதந்தி. ஒரு தகவலை வெளியிடும் பத்திரிகைகள், அது குறித்த உண்மைத்தன்மையை தன்னிடம் கேட்டு அறிந்த பின்னர் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :