- வீடு›
- பொழுதுபோக்கு›
- பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்தக்கூடாது... ரஜினி வக்கீல் பொது நோட்டீஸ்
பெயர், புகைப்படம், குரல் பயன்படுத்தக்கூடாது... ரஜினி வக்கீல் பொது நோட்டீஸ்
By: Nagaraj Sun, 29 Jan 2023 09:12:47 AM
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பெயரும், புகைப்படமும் மற்றும் குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக பயன்படுத்து கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி காந்த். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பெற்றது.
இதையடுத்து இவர் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல பிரபல நடிக்கவுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்திற்கு உலகமெங்கும் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சிலர் ரஜினிகாந்தின் புகைப்படத்தை வைத்து தவறான செய்திகள் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் பெயரும், புகைப்படமும் மற்றும் குரலையும் ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியாக பயன்படுத்து கூடாது என்று ரஜினிகாந்தின் வழக்கறிஞர் பொது நோட்டீஸ் விடுத்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.