Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • படவாய்ப்புகளும் இல்லை... ஞாபக மறதியாலும் தவிப்பு; பானுப்பிரியா குறித்து வெளியான தகவல்

படவாய்ப்புகளும் இல்லை... ஞாபக மறதியாலும் தவிப்பு; பானுப்பிரியா குறித்து வெளியான தகவல்

By: Nagaraj Mon, 06 Feb 2023 11:29:30 PM

படவாய்ப்புகளும் இல்லை... ஞாபக மறதியாலும் தவிப்பு; பானுப்பிரியா குறித்து வெளியான தகவல்

ஹைதராபாத்: ஞாபக மறதி, படவாய்ப்புகள் இல்லாமல் சிரமத்தில் தவித்து வருகிறேன் என்று நடிகை பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

நடிகை பானுப்பிரியா 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழ் திரை உலகில் பிரபலமான கதாநாயகியாக மாறினார். பட வாய்ப்புகள் இல்லாமல் திணறி வரும் நடிகை பானுப்ரியா சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தனக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்ரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். அவர் 1998 இல் ஆதர்ஷ் கௌஷலை மணந்தார். அவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அவர் கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்தார்.

அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் திணறி வரும் நடிகை பானுப்ரியா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

actress,film opportunities,memory,panupriya , நடிகை, நினைவாற்றல், பட வாய்ப்புகள், பானுப்பிரியா

பானுப்ரியா கூறியதாவது:- “சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை. ஞாபக மறதி. நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மறந்துவிட்டேன். பிறகு நடனத்தின் மீது ஆர்வம் குறைந்துவிட்டது. வீட்டில் நடனம் கூட பயிற்சி செய்வதில்லை.

சமீபத்தில் ஒரு படத்தின் லொகேஷனில் டயலாக்குகளை மறந்து விட்டேன். நினைவில் கொள்ள வேண்டிய பல விஷயங்களை மறந்துவிடுகிறேன் என கூறினார். கணவரை பிரிந்ததாக வெளியான செய்தியும் தவறு என்கிறார் பானுப்பிரியா. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என பானுப்பிரியா தெரிவித்தார்.

Tags :
|