Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • செட்டாகவில்லை... தாமாகவே முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை

செட்டாகவில்லை... தாமாகவே முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை

By: Nagaraj Wed, 11 Oct 2023 11:50:26 AM

செட்டாகவில்லை... தாமாகவே முன்வந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை

சென்னை: செட்டாகவில்லை... உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

fans,exempt,go to jail,two,interesting ,ரசிகர்கள், விலக்கு, சிறைக்கு, செல்கின்றனர், இருவர், சுவாரஸ்யம்

இந்த சீசனில் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள், இரண்டு நாமினேஷன்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற அடித்துள்ளது.

முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.

Tags :
|
|
|