Advertisement

சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை... நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

By: Nagaraj Sun, 26 Mar 2023 9:31:02 PM

சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை... நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

சென்னை: நான் சொன்னது இதுதான்... சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை. அதற்குள் விவாகரத்தா என்று கேள்வி எழுப்புகிறீர்களே என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு அதிகம் வைரல் ஆனது. நான் மறுபடியும் முயற்சி செய்தேன், மறுபடியும் தோற்று விட்டேன், நான் பாடம் கற்றுக்கொண்டேன். போன முறை தோல்வி அல்ல, என் தவறும் அல்ல.. அது துரோகம்" என ட்விட் செய்திருந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் 2ம் மனைவி ஜுவாலா கட்டாவை விவாகரத்து செய்கிறாரா என கேள்வி எழுப்பினார்கள்.

actor vishnu,description,failure,record,life,not talking ,நடிகர் விஷ்ணு, விளக்கம், தோல்வி, பதிவு, வாழ்க்கை, பேசவில்லை

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். நான் proffessional விஷயம் பற்றி தான் குறிப்பிட்டேன், சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

"ஒருவருக்கு நாம் கொடுக்கும் பெரிய கிப்ட் TRUST என்பது தான். ஆனால் தோற்றுவிட்டால் நாம் நம்மையே குறைசொல்லி கொள்கிறோம். அவ்வளவு கடினமாக இருக்க தேவையில்லை. இதை தான் நான் சொல்ல வந்தேன்" என விஷ்ணு விளக்கி உள்ளார்.

Tags :
|
|