Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தி லெஜண்ட் படத்தை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ய விருப்பமில்லையாம்

தி லெஜண்ட் படத்தை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ய விருப்பமில்லையாம்

By: Nagaraj Sat, 22 Oct 2022 10:22:51 AM

தி லெஜண்ட் படத்தை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ய விருப்பமில்லையாம்

சென்னை: தனது தி லெஜண்ட் படத்தை எந்த ஓ.டி.டி. தளத்திற்கும் விற்பனை செய்ய சரவணனுக்கு விருப்பம் இல்லையாம். இதனால் எந்த ஓடிடியிலும் இந்த படம் வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது.

தொழில் அதிபர் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்திற்கு வராத நிலையில், அது குறித்த முக்கிய முடிவை படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சரவணன் எடுத்திருக்கிறார்.

தொழிலதிபர் சரவணன் நாயகனாக நடித்திருக்கும் லெஜெண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நாயகிகளுடன் நடனமாடி தன்னுடைய கடையை பிரபலப்படுத்தி வந்தவர் தொழிலதிபர் சரவணன். அந்த விளம்பர படங்களை ஜெடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கி வந்தனர்.

info,otd,sale,no interest,saravanan,success ,தகவல்கள், ஓடிடி, விற்பனை, விருப்பமில்லை, சரவணன், வெற்றி

இவர்கள் மூவரும் இணைந்து லெஜெண்ட் திரைப்படத்தை எடுத்திருந்தனர். லெஜெண்ட் படத்தில் சரவணன் நாயகனாக அறிமுகமானதால், படத்தில் நடிப்பவர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பிரபலமானவர்களாக தேர்வு செய்திருந்தனர்.

அந்த வகையில் பிரபு, மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார், சுமன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அதில் நடிகர் விவேக் காலமானதால், படப்பிடிப்பில் பதிவு செய்யப்பட்ட அவரின் குரலையே படத்திற்கு பயன்படுத்தியிருந்தனர்.

நடிகர்களை தவிர ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், இசைக்கு ஹாரிஷ் ஜெயராஜ் ஆகியோரை பயன்படுத்தியிருந்தனர். அவர்களின் பங்களிப்பு படத்திற்கு பெரும் உதவியாக அமைந்தது.

தி லெஜெண்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக ஓர் அதிரடி முடிவை சரவணன் எடுத்துள்ளார். அதாவது, தனது தி லெஜண்ட் படத்தை எந்த ஓ.டி.டி. தளத்திற்கும் விற்பனை செய்ய சரவணனுக்கு விருப்பம் இல்லையாம். இதையடுத்து இந்தப் படம் எந்த ஓடிடியிலும் வெளியாகாது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

Tags :
|
|
|