Advertisement

உடல்நலக்குறைவால் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

By: Nagaraj Sun, 05 Feb 2023 10:25:17 PM

உடல்நலக்குறைவால் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் (68) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வீடு, மனைவி, மக்கள் திரைப்படம் மூலமாக 1988ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான டி.பி.கஜேந்திரன், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார்.

d. p. gajendran,director,late,principal,stalin, ,இயக்குநர், டி.பி.கஜேந்திரன், மறைவு, முதல்வர், ஸ்டாலின்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்த டி.பி.கஜேந்திரன் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமான நிலையில், இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரனின் மறைவு தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு அவரது நண்பரும், முதல்வருமான ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எனது அன்பு நண்பரும், பிரபல இயக்குனரும், நடிகரும், கல்லூரி நண்பருமான டி.பி.கஜேந்திரன் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|