Advertisement

இப்போ கோடிகளில சம்பளம்... அப்போ சமந்தாவிற்கு ரூ.500 தானாம்

By: Nagaraj Thu, 07 July 2022 3:03:37 PM

இப்போ கோடிகளில சம்பளம்... அப்போ சமந்தாவிற்கு ரூ.500 தானாம்

சென்னை: தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ஆரம்பத்தில் வெறும் ரூ. 500 மட்டும் சம்பளமாக பெற்றுள்ளார் நடிகை சமந்தா என்று தகவல்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிசியாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

fans,viral,samantha,salary,crores,rs.500 ,ரசிகர்கள், வைரல், சமந்தா, சம்பளம், கோடிக்கணக்கு, ரூ.500

மேலும், தமிழில் இவர் நடித்துள்ள சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. சமந்தா தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்கும், ரூ. 3 முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகை சமந்தா, முதன் முதலில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை சமந்தா முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ. 500 தானாம். இந்த செய்தி தற்போது சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|