Advertisement

நாளை மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:30:33 PM

நாளை மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டீசர் 14ம் தேதி ரிலீஸ்... விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் நாளை 14ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் சன் தொலைக்காட்சியின் யூடியூப் சேனலில் இந்த டீசர் வெளியாகிறது. மாஸ்டர் திரைப்படம் 2020ஆம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

ஒவ்வொரு மாநில ரசிகர்களுக்கும் தனித்தனி தகவல்களைத் தர விரும்பிய மாஸ்டர் படக்குழு வித்தியாசமான போஸ்டர்களை ரிலீஸ் செய்து ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. ஜான் துரைராஜ் என்ற கேரக்டரில் விஜய்யும், பவானி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடிப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

teaser,nov. 14,announcement,official,master ,டீஸர், நவம்பர் 14, அறிவிப்பு, அதிகாரப்பூர்வம், மாஸ்டர்

ஆனாலும் ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் என கேரக்டர்களை மிகச் சிறப்பாகக் கையாளக்கூடிய நடிகர்களுக்கு இந்தப் படத்தில் என்ன ரோல் என்று ரசிகர்களிடம் கேள்விகள் இருக்கின்றன. அதிலும், கைதி படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்த அர்ஜுன் தாஸ், மலையாளத்தில் சிறந்த நடிகராக அறியப்படும் ஆண்டனி வர்கீஸுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதால் அவர் கேரக்டரின் மீதும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் பவானி என்றிருந்தாலும் அவரும் கழுத்தில் சிலுவை அணிந்துகொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதை போஸ்டரில் கண்ட ரசிகர்கள், விஜய் மீது எப்போதும் சூட்டப்படும் ‘கிறிஸ்தவர்’ என்ற அடையாளத்துக்குப் பதில் தரும் படமாகவும் இது இருக்குமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

இப்படி பல கேள்விகள் போஸ்டர்களிலேயே உருவாகிவிட்டதால், டீசரில் இதற்கான பதில் இருக்கப்போகிறதா... இல்லை, டிரெய்லருக்கான முன்னோட்டமாக மட்டுமே இது இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் தீபாவளி சிறப்பாக வெளியிடப்பட்ட பிறகு, கிறிஸ்துமஸ் சிறப்பாக டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிகிறது.

Tags :
|