Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு... ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார்

அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு... ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார்

By: Nagaraj Fri, 18 Nov 2022 10:42:56 AM

அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு... ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். இவரது படப்பிடிப்பு தளத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். ற்கனவே ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.

sivarajkumar,jailer movie,photoshoot,shooting spot,announcement ,
சிவராஜ்குமார், ஜெயிலர் படம், புகைப்படம், ஷூட்டிங் ஸ்பாட், அறிவிப்பு

இதனிடையே தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் புகைப்படத்தை வெளியிட்டு முக்கிய நடிகர் இணைந்துள்ளதை அறிவித்து இருக்கிறது சன் பிக்சர்ஸ். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாத்த படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லாத நிலையில் ஜெயிலர் படத்தை செம ஹிட் அடிக்க வைக்க வேண்டும் என்று படக்குழுவினர் கடினமாக உழைத்து வருகின்றனர். படப்பிடிப்பு குறித்து அவ்வபோது அப்டேட் செய்கின்றனர் என்று கோலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Tags :