Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஓ.எம்.ஜி. 2 படத்தில் நடித்துள்ள நடிகர் அக்சய் குமாரின் கொடும்பாவி எரிப்பு

ஓ.எம்.ஜி. 2 படத்தில் நடித்துள்ள நடிகர் அக்சய் குமாரின் கொடும்பாவி எரிப்பு

By: Nagaraj Mon, 14 Aug 2023 7:39:47 PM

ஓ.எம்.ஜி. 2 படத்தில் நடித்துள்ள நடிகர் அக்சய் குமாரின் கொடும்பாவி எரிப்பு

மும்பை: வட மாநிலங்களில் நடிகர் அக்சய்குமார் நடித்துள்ள ஓ.எம்.ஜி. 2 படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமார், தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது அக்ஷய் குமார் ஓஎம்ஜி 2 படத்தில் நடித்துள்ளார். படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.

பாலியல் கல்வியை கற்றுத் தரும் கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில், இந்துக் கடவுள்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தணிக்கை குழு படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது.

actor,akshay-kumar,burn,kodumbavi, ,அக்‌ஷய் குமார், எரிப்பு, கொடும்பாவி, நடிகர்

இது குறித்து அக்ஷய் குமார் கூறும்போது, “இது இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட பாலியல் விழிப்புணர்வு படம். படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. யுஏ சான்றிதழ் கிடைத்தால் இன்னும் பலர் பார்ப்பார்கள்” என்றார்.

இந்நிலையில் வட மாநிலங்களில் ஓ.எம்.ஜி. 2 படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

படத்தை திரையிடக் கூடாது என்று கோஷம் எழுப்பினர். அக்ஷய் குமாரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. திரையரங்குகளில் படத்தின் போஸ்டர் பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், தீ வைத்து கொளுத்தப்பட்டன.

Tags :
|
|