Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை தொடக்கம் .

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை தொடக்கம் .

By: vaithegi Fri, 17 Nov 2023 3:39:45 PM

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் நாளை தொடக்கம் .

தமிழ்நாடு முழுவதும் 11க்கும் மேற்பட்ட இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தொடங்கப்படுகிறது ....நடிகர் விஜய் சமீபகாலமாகவே தனது மக்கள் இயக்கம் சார்பாக சில நல்ல விஷயங்களை செய்து கொண்டு வருகிறார். எனவே இதனை வைத்து பார்க்கையில் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிகிறது.

அந்த வகையில், அவரது ரசிகர்கள், அண்ணா, பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பது முதல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டியதை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில் கூட அரசியல் பற்றிய கேள்விக்கு ‘2026 கப்பு முக்கியம் பிகிலு’ என்று சூசகமாக பதில் கூறியிருந்தார்.

thalapathy vijay library,vijay peoples movement ,தளபதி விஜய் நூலகம்,விஜய் மக்கள் இயக்கம்

இந்த நிலையில், அவரது அடுத்த நகர்வாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் “தளபதி விஜய் நூலகம்” திட்டம் தொடங்கப்படுகிறது. நாளை முதற்கட்டமாக தாம்பரம், பல்லாவரம் தொகுதியில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைக்கிறார். 2-ம் கட்டமாக வருகிற நவம்பர் 23ம் தேதி மேலும் 21 இடங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இதையடுத்து இது தொடர்பாக வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் பயிலகம் திட்டத்தினை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில், “தளபதி விஜய் நூலகம்” என்ற பெயரில் முதற்கட்டமாக, (18.11.2023) காலை 10.35 மணியளவில் செங்கல்பட்டு மாவட்டம் தொண்டரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து துவக்கி வைக்கிறார்.

அதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும், அரியலூர், நாமக்கல் மேற்கு பகுதி, சென்னை கிழக்கு வடசென்னை கிழக்கு பகுதி, வடசென்னை வடக்கு பகுதி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 11 இடங்களிலும் தளபதி விஜய் நூலகம் திறக்கப்படவுள்ளது

Tags :