Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு

சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு

By: Monisha Fri, 28 Aug 2020 3:13:58 PM

சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு

கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. குறிப்பாக கார்த்தி பார்த்திபன் ஆகிய இருவரும் போட்டி போட்டு இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவும் செல்வாராகவன் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார்த்தி, பார்த்திபன் இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஐயப்பனும் கோஷியும்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

super hit,tamil remake,karthi,parthiban,kathiresan ,சூப்பர் ஹிட்,தமிழ் ரீமேக்,கார்த்தி,பார்த்திபன்,கதிரேசன்

இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் ஏற்கனவே சசிகுமார் மற்றும் சரத்குமார், சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி கார்த்தி மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான செய்திக்கு தனது பாணியில் கமெண்ட் அடித்த நடிகர் பார்த்திபன் 'இச்செய்தி நற்செய்தி ஆகலாம். ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசன் தவிர அனைவரும் என்னிடம் பேசி விட்டார்கள். எனவே..' என்று குறிப்பிட்டுள்ளார். எனவே கார்த்தி, பார்த்திபன் நடிப்பில் ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளி வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|