Advertisement

50 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை சாஷீனிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்கர் குழு

By: Nagaraj Wed, 17 Aug 2022 6:21:10 PM

50 ஆண்டுகளுக்கு பின்னர் நடிகை சாஷீனிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்கர் குழு

லாஸ் ஏஸ்சல்ஸ்: நடிகை சாஷீனுக்கு 75 வயதாகும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது.

1973-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில் 'தி காட்பாதர்' (192) படத்துக்கு சிறந்த படம், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த நடிகர் என 3 விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்காவின் பூர்வகுடி இனத்தை சேர்ந்த மார்லன் பிராண்டோவின் பெயர் விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷீன் லிட்டில் பெதர் மேடைக்கு வந்தார். அவர் பிராண்டோவின் பிரதிநிதியாக விருதை பெற வந்திருக்கிறார் என அனைவரும் நினைத்தனர். ஆனால் விருதை பெற மறுத்த அவர், மைக் முன்பு சென்று மார்லன் பிராண்டோவின் கடிதத்தை வாசிக்க தொடங்கினார்.

oscar committee,former president,apology,actress,letter ,ஆஸ்கர் குழு, முன்னாள் தலைவர், மன்னிப்பு, நடிகை, கடிதம்

"திரைத்துறையில் அமெரிக்க பூர்வீக குடிகள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதால் மார்லன் பிராண்டோ இந்த விருதை வாங்க மறுத்துவிட்டார்" என கூறிவிட்டு சாஷீன் லிட்டில் பெதர் மேடையை விட்டு இறங்கினார். மார்லன் பிராண்டோவின் கடிதமும், சாஷீன் அதை வாசித்ததும் ஆஸ்கர் அரங்கை அதிரச் செய்தது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் சாஷீன் பல அவமதிப்புகளை எதிர்கொண்டார். திரைத்துறையில் அவர் புறக்கணிக்கபட்டார். தற்போது சாஷீனுக்கு 75 வயதாகும் நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவரிடம் ஆஸ்கர் குழு மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக சாஷீனுக்கு ஆஸ்கர் குழுவின் முன்னாள் தலைவர் டேவிட் ரூபின் எழுதியுள்ள கடிதத்தில், "திரைத்துறையில் நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் எதிர்கொண்ட சுமையையும், இழப்பையும் ஈடு செய்ய முடியாது. உங்களது துணிச்சல் நீண்டகாலமாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்காக ஆழ்ந்த மன்னிப்பு கோருகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

Tags :