Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஓவர் டிமாண்ட் ஒத்து வராது... சமந்தாவை கழற்றி விட்டு தமன்னாவை புக் செய்யறாங்களாம்

ஓவர் டிமாண்ட் ஒத்து வராது... சமந்தாவை கழற்றி விட்டு தமன்னாவை புக் செய்யறாங்களாம்

By: Nagaraj Mon, 17 Oct 2022 11:25:46 PM

ஓவர் டிமாண்ட் ஒத்து வராது... சமந்தாவை கழற்றி விட்டு தமன்னாவை புக் செய்யறாங்களாம்

ஐதராபாத்: முடியலை... முடியலைன்னு சமந்தாவை ஓரங்கட்டி விட்டு தமன்னாவை புக் செய்ய முடிவு செய்து இருக்காங்களாம். புஷ்பா இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், இதில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பார். இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுபோல ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி பாடலும் மிகவும் ஸ்பெஷலாக வரவேற்பை பெற்றது

samantha,tamannaah,glamor dance,patapooja,part 2 ,சமந்தா, தமன்னா, கவர்ச்சி நடனம், படப்பூஜை, 2ம் பாகம்

இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி படப்பூஜை நடைபெற்றது. இத்தகைய நிலையில், இந்த படத்திலும் சமந்தா ஒரு கவர்ச்சி நடனம் ஆடுவதாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், முன்பை விட சமந்தா இதில் அதிக டிமாண்ட் செய்ததாகவும் எனவே, ஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாத படக்குழு அவருக்கு பதில் தமன்னாவை ஓகே செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Tags :