Advertisement

பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்யலட்சுமி மகா சங்கமம்

By: Nagaraj Mon, 10 Oct 2022 09:59:41 AM

பாண்டியன் ஸ்டோர்ஸ் – பாக்யலட்சுமி மகா சங்கமம்

சென்னை: ஒரு மணிநேர மகா சங்கமம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்யலட்சுமி சீரியல் விஜய் டிவியில் ஒரு மணி நேர மகா சங்கமமாக ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் திருமணத்திற்காக கொடைக்கானலுக்கு வருகிறார்கள். அதேபோல் கோபியும் தனது மனைவி ராதிகாவுடன் தேனிலவுக்கு கொடைக்கானலுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், மூர்த்தி தங்கியிருக்கும் அதே விடுதியில் கோபியும் அறை புக் செய்துள்ளார். இந்தச் சூழ்நிலைகள் நிஜம் என்பது போல் கண்ணன் கோபியைப் பார்க்கிறான். உடனே மாமாவிடம் ஓடி வந்து நடனமாடி தன் அறையில் குதிக்கிறான். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கோபி திருதிருவென முழித்தார். அப்போதுதான் அறையில் இருந்த ராதிகா வெளியே வந்தார்.

bhakyalakshmi,maha sangam,pandian stores,serial ,கோபி, பாக்யலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகா சங்கமம், மூர்த்தி

இதை பார்த்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார். எங்க பாக்யா அக்காவை ஏமாத்திட்டு இந்த பொண்ணு கூட இருக்கா என்று இன்னும் கேள்வி கேட்கிறார் கண்ணன். இதை பார்த்த ராதிகாவுக்கும் கோபம் வந்தது. மேலும் கண்ணன் மூர்த்தி ஜீவாவிடம் சென்று கோபி இங்கே ராதிகாவுடன் இருப்பதாகச் சொல்லப் போகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, பெரிய பிரச்னையை செய்ய உள்ளார். மேலும் எழில் தனது பட வேலைகளுக்காக பாக்யா, கோபியின் அப்பா, அம்மா மற்றும் இனியா ஆகியோரை கொடைக்கானலுக்கு அழைத்து வருகிறார். இதனால் கோபிக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ராதிகாவை எல்லாரும் குத்திக்காட்டி பேச , கோபம் எல்லாம் கோபி மீது பாய்கிறது.

ஏன் கொடைக்கானல் வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு கோபி நினைக்கிறார். கடந்த மகா சங்கத்தில் கோபிக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த காட்சி ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது. மேலும் தற்போது பல சுவாரசியமான காட்சிகளுடன் பாக்யலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒரு மணி நேர மகா சங்கத்துடன் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

Tags :