- வீடு›
- பொழுதுபோக்கு›
- காந்தாரா படத்தின் பார்ட் 2 வெளியாகும் என்று உறுதியானது
காந்தாரா படத்தின் பார்ட் 2 வெளியாகும் என்று உறுதியானது
By: Nagaraj Tue, 07 Feb 2023 11:26:51 PM
கர்நாடகா: காந்தாரா படத்தின் பார்ட் 2 வெளியாகும் என்று உறுதியாக தெரிய வந்துள்ளது.
கன்னட திரைப்படமான காந்தாரா வெளியான சில நாட்களிலேயே இந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் தெய்வ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பலராலும் விரும்பப்பட்டது.
இப்படம் வெளியான சில நாட்களிலேயே தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்த படத்தை இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார். முக்கிய வேடத்திலும் நடித்தார். இப்படத்தின் கதைக்களம் கர்நாடகாவில் உள்ள பஞ்சுருளி என்ற உள்ளூர் தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதில் படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டி கலந்து கொண்டார். அப்போது காந்தாரத்தின் இரண்டாம் பாகம் வருமா? அவரிடம் கேட்கப்பட்டது.
நீங்கள் ஏற்கனவே பார்த்தது காந்தாரத்தின் இரண்டாம் பாகம். இனி முதல் பாகத்தை எடுக்க உள்ளோம் என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். இதன் மூலம் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாகியுள்ளது