Advertisement

விரைவில் புதியபாதை-2 உருவாகும் என பார்த்திபன் தகவல்

By: Nagaraj Fri, 23 June 2023 8:36:19 PM

விரைவில் புதியபாதை-2 உருவாகும் என பார்த்திபன் தகவல்

சென்னை: புதிய பாதையின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என பார்த்திபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது புதிய பாதை 2-ம் பாகம் உருவாகும் என்று தெரிவித்து உள்ளார்.

பார்த்திபனின் திருப்புமுனை படமான புதிய பாதை 1989 இல் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பார்த்திபனே இயக்கி நடித்துள்ளார். கதாநாயகியாக சீதா வந்தார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அந்த ரவுடியை அந்த இளம்பெண் திருமணம் செய்து கொள்வதும், அதனால் அந்த ரவுடியின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் திரைக்கதையாக இருந்தது. புதிய பாதையின் 2ம் பாகம் உருவாக்கப்படும் என பார்த்திபன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

coming soon,new path 2,parthiban,project,shooting, ,திட்டம், படப்பிடிப்பு, பார்த்திபன், புதிய பாதை 2, விரைவில்

மேலும் நவீன தொழில் நுட்பத்தில் இந்தப் படத்தை உருவாக்கப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால் பட வேலைகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் இன்றைய தலைமுறைக்கு ஒரு புதிய பாதையை போடுங்கள். புதிய பாதை 2-ம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு பார்த்திபனுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்து பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “தற்போது தயாராகி வரும் படம் முடிந்ததும் புதிய பாதை 2-ம் பாகம் உருவாகும்” என்று தெரிவித்து உள்ளார். விரைவில் புதிய பாதை 2 படப்பிடிப்பை தொடங்க பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார்.

Tags :